Thursday, September 27, 2012

ஓம் நமச்சிவாய

                    இறைவன் திருவருளால் ஸ்ரீலஸ்ரீ நாகராஜ சித்தர் சுவாமிகள் அவர்கள் தற்போது திருவண்ணாமலையில் குபேர லிங்கம் அருகே இருக்கிறார் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்திக் கெள்கிறோம்

திருச்சிற்றம்பலம்

Wednesday, March 21, 2012

அய்யாவின் போட்டோ

ஸ்ரீலஸ்ரீ நாகராஜ சித்தர்



அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களுக்கு.....

பிரம்ம மயமாக காட்சியளிக்கும் அய்யா ஸ்ரீலஸ்ரீ நாகராஜ சித்தர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளார். அவர் யாரிடமும் ஏதும் பேசுவதில்லை. பக்தர்கள் அவருக்கு தொண்டு செய்யும் விதமாக தங்களால் இயன்ற அளவு தொண்டு செய்து வருகிறார்கள். அவரைப் பற்றி ஏதும் தெரியவில்லை. அவருடன் கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் ஒரு அம்மா அவருக்கு தொண்டு செய்து வருகிறார்கள். அய்யா அவர்கள் திருவண்ணாமலையில் இருந்ததாக தெரிவிக்கிறார்கள். அவர் மதுரையில் 10 ஆண்டு காலமாக இருந்து பிறகு இராமநாதபுரத்தில் வந்து இருக்கிறார்கள். அய்யா அவர்களை சந்தித்து அவரது திருஷ்டி கிடைக்கப்பெற்றால் நமது பிரச்சனைகள் நம்மை விட்டு களைந்து விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஞானிகளின் திருஷ்டி மட்டும் தானே தேவை. அதைவிடுத்து பல பக்தர்கள் அவரிடம் குறி சொல்ல கேட்கிறார்கள். அவர் யாரிடமும் பேசுவதில்லை. அவ்வாறு அவர் பேசினாலும் அவர் பேசும் சூட்சம வார்த்தைகள் யாருக்கும் புரியாது.
அய்யா அவர்களிடம் வந்து தரிசனம் பெறுபவர்களுக்கு எத்தகைய ராகு கேது தோஷமும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அய்யா இப்பொழுது இராமநாதபுரத்தில் நொச்சிவயல் ஊரணியின் மேற்கே அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் அருகாமையில் அமைந்துள்ளார்.
அய்யாவுக்கு வேலரசன் என்பரும் சோலைமுருகன் என்பவரும் தீவிரமாக தொண்டு செய்து வருகிறார்கள். அவரது அலைபேசி எண்.9677940300